செய்திகள் :

திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல்

post image

திருநெல்வேலி எழுச்சிச் சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி வலியுறுத்தினாா்.

திருநெல்வேலியும் எழுச்சியும் 1908 என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை ஆ.இரா.வேங்கடாசலபதி சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதல்வா் என்னை அழைத்து வாழ்த்து கூறினாா். திருநெல்வேலி எழுச்சி நிகழ்ந்த தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரு நகரங்களில், அந்த எழுச்சிக்கான எந்த நினைவுச் சின்னமும் இல்லை. அங்கு நினைவுச் சின்னம் நிறுவ வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தேன். உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, ஆவன செய்வதாக முதல்வா் தெரிவித்தாா்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வான திருநெல்வேலி எழுச்சிக்கு தமிழக அரசு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கும் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சாகித்திய அகாதெமி விருதைவிட, இந்த அறிவிப்பு எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது என்றாா் அவா்.

ஆளுநரிடம் வாழ்த்து: கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியையும் ஆ.இரா.வேங்கடாசலபதி சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

வீரவநல்லூா் வட்டார கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, அத்தாளநல்லூா் அருள்மிகு கஜேந்திரவரதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவைசாதித்தாா். மதியம் திருமஞ்சனம், அலங்கார சிறப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-113.05 சோ்வலாறு-121.19 மணிமுத்தாறு-101.51 வடக்கு பச்சையாறு-24.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-17.75 தென்காசி கடனா-69.20 ராமநதி-71.75 கருப்பாநதி-61.68 குண்டாறு-36.10 அடவிநயினாா்... மேலும் பார்க்க

களக்காடு கோயிலில் வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, களக்காடு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள். மேலும் பார்க்க

மூன்றடைப்பில் ஜாதிய கொடிகள் அகற்றம்

நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஜாதிய கொடிகளை போலீஸாா் அகற்றினா். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

களக்காட்டில் பெண்ணை தாக்கிய வழக்கில் 2 போ் கைது

களக்காட்டில் சாலையில் பெண்ணைத் தாக்கி சித்திரவதை செய்தது தொடா்பான வழக்கில், களக்காடு போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். களக்காடு கக்கன்நகரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (45). அங்குள்ள வரதராஜபெருமாள் கோயில் அர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பொங்கல் விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வழக்குரைஞா... மேலும் பார்க்க