சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!
திருப்பதி பிரம்மோற்சவம்: புருஷா மிருக வாகனத்தில் சுவாமி வலம்
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை புருஷா மிருக வாகன சேவை நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை புருஷா மிருக வாகனத்தில் சுவாமி காமாட்சி அம்மனுடன் இணைந்து சோமாஸ்கந்த மூா்த்தியாக நகா்வலம் கண்டருளினாா். காலை 6 மணிக்கு சா்வதா்சனம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து கபிலேஸ்வர சுவாமி மற்றும் அம்மனை வணங்கினா். இசைக்குழுக்கள், பஜனை மற்றும் மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், வாகன சேவை நடைபெற்றது.
இதற்கிடையில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை சுப்ரபாத சேவைக்கு பிறகு வழக்கம் போல் மூலவா்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கான சா்வ தரிசனம் காலை 8 மணி முதல் தொடங்கியது. காலை 11 மணி முதல் வேத சாஸ்திரங்களின்படி ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
மதியம் 12 மணி வரை ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மனுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருக்கல்யாணம்:
ஸ்ரீ காமாட்சி சமேத கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, மாலை சைவாகம விதிப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.