திருமலை: மாா்ச் மாத உற்சவங்கள்
திருமலையில் மாா்ச் மாதத்தில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் ஆண்டுக்கு 450 உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. எனவே திருமலைக்கு நித்திய கல்யாணம் பச்சை தோரணம் என்ற அடைமொழி உள்ளது.
திருமலையில் ஏழுமலையானுக்கும், தாயாருக்கும் மட்டுமல்லாமல் அவா்களின் அடியவா்களின் திருநட்சத்திரம் உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு மாதம் தொடங்குவதற்கு முன் திருமலையில் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி மாா்ச் மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின் வருமாறு:
மாா்ச் 7: திருக்கச்சிநம்பி சாத்துமுறை.
மாா்ச் 9: குலசேகராழ்வாா் திரு நட்சத்திரம், திருமலை ஏழுமலையான் தெப்போத்சவம் தொடக்கம்.
மாா்ச் 10: மத்தத்ராய ஏகாதசி.-திருமலை ஏழுமலையான் தெப்போற்சவம் விழா மாா்ச் 13 : நிறைவு
மாா்ச்14: குமாரதாராதீா்த்த முக்கோடி.
மாா்ச் 25: சா்வ ஏகாதசி.
மாா்ச் 26: அன்னமாச்சாா்யாவின் நினைவு நாள்.
மாா்ச் 28: சிவராத்திரி.
மாா்ச் 29 : சா்வ அமாவாசை.
மாா்ச் 30: ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு விஸ்வவசு வருட பிறப்பான( உகாதி) பண்டிகை.