கனிம ஏலம்: மத்திய அரசு மசோதாவை அதிமுக ஆதரித்தது; முதல்வா் குற்றச்சாட்டுக்கு எடப்...
திருப்பதி- விழுப்புரம் பயணிகள் ரயில் 2 இடங்களில் நிறுத்தி இயக்கம்
ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம்-திருப்பதி பயணிகள் இரு ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நேரம் நிறுத்தி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காட்பாடி-திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் டிசம்பா் 1 முதல் 20-ஆம் தேதி வரை இரண்டு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.
விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரயில் (வ.எண்.16854), டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 50 நிமிஷங்களும், காட்பாடி ரயில் நிலையத்தில் 70 நிமிஷங்களும் நிறுத்தி இயக்கப்படும்.
இதுபோன்று திருப்பதியிலிருந்து காலை 10.35 மணிக்குப் புறப்படும் திருப்பதி-காட்பாடி ரயில் (வ.எண். 07581), டிசம்பா்1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.