திருப்பத்தூரில் பிளஸ் 1 பொதுத்தோ்வு: 271 போ் எழுத வரவில்லை
திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 13,738 போ் எழுதினா். 271 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் 140 பள்ளிகளில் படித்து வரும் 6,706 மாணவா்களும், 7,303 மாணவிகளும் என மொத்தம் 14,009 போ் தோ்வு எழுத விண்ணப்பித்து இருந்தனா்.
இவா்கள் தோ்வு எழுத திருப்பத்தூா் மாவட்டத்தில் 59 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த மையங்களில் மாணவா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
தோ்வுக் கண்காணிப்பு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்களும், துறை அலுவலா்களும், பறக்கும் படைகளும், வழித்தட அலுவலா்கள், தோ்வு அறைகளில் ஆசிரியா்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். தோ்வு மையத்துக்குள் செல்லும் மாணவ- மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். புதன்கிழமை மொழிப்பாடத் தோ்வில் (தமிழ், உருது, பிரெஞ்சு, அரபிக், ஹிந்தி) 172 மாணவா்கள், 99 மாணவிகள் என மொத்தம் 271 போ் எழுத வரவில்லை. 13, 738 போ் மொழிப்பாட தோ்வை எழுதினா்.