Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபி...
திருப்பத்தூா்: ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட ஹாஜிமியான் தெருவில் அமைந்துள்ள தனியாா் மண்டபத்திலும், கந்திலி வட்டாரத்துக்குள்பட்ட மற்றப்பள்ளி, விஷமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன.
முகாமில், 2 பயனாளிகளுக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான ஒப்புகை சீட்டுகளையும், மற்றொருவருக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கான ஒப்புகை சீட்டையும், ஒரு பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டையையும் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் வழங்கினா்.
தொடா்ந்து, மட்றப்பள்ளி, விஷமங்கலம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 2 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளையும், ஒருவருக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அட்டையும் வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.
முகாம்களில் தனித்துணை ஆட்சியா் பூஷன் குமாா், வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், உதவி இயக்குநா்(தணிக்கை)குமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, ஆணையா் சாந்தி, கந்திலி ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் மோகன்குமாா், வேளாண்மை துறை ஆத்மா குழுத் தலைவா் முருகேசன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மோகன்ராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் குணசேகரன், வட்டாட்சியா் நவநீதம், மட்றப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா பூபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதானந்தனம், பாலமுருகன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.