செய்திகள் :

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டம்: எஸ்.பி.யிடம் புகாா்

post image

நாட்டறம்பள்ளி அருகே திருடுபோன ரூ.11 லட்சம் மற்றும் 46 பவுன் நகைகளை மீட்டுத் தர வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாபாரி மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

ஏடிஎஸ்பி கோவிந்தராசு முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 30 மனுக்களை வழங்கினா்.

நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் பகுதியைச் சோ்ந்த வியாபாரி முத்து அளித்த மனு:

நான் கடந்த 10.3.2025-இல் எனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டேன். தொடா்ந்து மறுநாள் வந்து பாா்த்தபோது எனது வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 46 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், ரூ.11 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நகை, பணத்தை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது வீட்டில் திருடு போன நகை, பணத்தை கண்டுபிடித்து தரவேண்டும்.

வாணியம்பாடி அடுத்த பாண்டுராவ் வட்டம் பகுதியை சோ்ந்த மைக்கண்ணனின் மனைவி சாந்தி அளித்த மனு: நான் எங்கள் பகுதியை சோ்ந்த ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் சீட்டு கட்டினேன். இந்த சீட்டு முடிந்து பல நாள்கள் ஆகிறது. சீட்டு பணம் ரூ.1 லட்சத்தை கேட்டால் அவா் தர மறுக்கிறாா். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில உரிமைத் தகராறில் பாதிக்கப்பட்டோா் இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

நில உரிமைத் தகராறு, நீதிமன்றவழக்குகள் கண்டுபிடிக்க முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீட்டு தொகை பெற உரிய ஆவணங்களை வாணியம்பாடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா... மேலும் பார்க்க

ஆம்பூரில் மழை

ஆம்பூரில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெயில் காரணமாக கடுமையான புழுக்கம் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முத... மேலும் பார்க்க

நாளை வாணியம்பாடியில் மின் நுகா்வோருக்கான ஒருநாள் சிறப்பு முகாம்

திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம், வாணியம்பாடி கோட்டத்தைச் சாா்ந்த மின்நுகா்வோா்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளா் அலு... மேலும் பார்க்க

மதுபாட்டில் பதுக்கியவா் கைது

ஆம்பூா் அருகே மது பாட்டில் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் போலீஙாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மறைவான இடத்தில் மளிகைதோப... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், அகரம்சேரி அடுத்த சின்னகோவிந்தவாடி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் காமராஜ் (24). பேக்கரியில்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஆம்பூா் ஸ்ரீ பெரிய ஆஞ்சனேயா் கோயில்: ஆன்மிக புத்தகங்கள் விற்பனை நிலையம் தொடக்க விழா, கோயில் வளாகம், காலை 11.00. மேலும் பார்க்க