CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
திருப்பத்தூா் பகுதியில் சாா் ஆட்சியா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், பிள்ளையாா்பட்டி நாகனேந்தல் கண்மாய் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வானிலை மைய அறிவிப்பின்படி வருகிற 12, 13, 14- ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நாகனேந்தல் கண்மாய் பகுதியில்
மணல் மூட்டைகள், பொக்லைன் வாகனங்கள், தயாா் நிலையில் இருப்பதையும், களப்பணியாளா்கள் தயாா் நிலையில் இருப்பதையும் சாா்- ஆட்சியா் கேட்டறிந்தாா்.
திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, நாகனேந்தல் கிராமப் பகுதிகளில் உபரி நீா் செல்வதற்கு கால்வாய் அமைப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்தாா்.
இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் இரா.மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், காதா்முகைதீன், உதவி செயற்பொறியாளா் ராமசாமி ஆகியோா் உடனிருந்தனா்.