டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 86.02 ஆக நிறைவு!
திருப்பரங்குன்றத்தில் சிறப்பு கட்டண தரிசனம் இன்று ரத்து
திருப்பரங்குன்றத்தில் இன்றும் நாளையும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இன்று (14.07.2025) காலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கிற்கு பின் காலை 7.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருக்கோயிலில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பொது தரிசனத்திலேயே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
விம்பிள்டன்: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் சின்னர்!
காலை 5.25 மணிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சைக் கொடி அசைக்க, ராஜகோபுரம் மற்றும் ஏனைய விமானங்களுக்கு சமகாலத்தில் மஹா குடமுழுக்கு விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணும் வண்ணம் கோயிலின் மேல்தளத்திற்கு செல்ல கருணையில்லம், கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, லெட்சுமி தீர்த்தம் என நான்கு வழிகள் அமைக்கப்பட்டு சுமார் 1700 பேர் குடமுழுக்கு விழாவினைகாண கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் கோயிலின் வெளிப்புறங்களில் 26 இடங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குடமுழுக்கு விழாவில் மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.