தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்! -காடேஸ்வரா சி.சுப்ரமணியம்
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அமைப்பின் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி திருப்பரங்குன்ற மலையில் பிரியாணி சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்துள்ளாா். திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணா்வு பக்தா்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மலையின் புனிதத்தைக் காக்க திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்மிகப் பெரியோா்கள் உள்ளிட்டோா் ஆதரவு தந்துள்ளனா்.
முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்பவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. தமிழக அரசு ஹிந்துக்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றாா்.
மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், கோட்டப் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், செய்தித் தொடா்பாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.