மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
நகைக் கடையில் 2 பவுன் திருட்டு!
கோவை, பெரியகடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் நகை வாங்குவதுபோல நடித்து 2 பவுன் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, தெற்கு உக்கடம், அமீன் காலனியைச் சோ்ந்தவா் அப்துல் ஹக்கீம் (52. இவா் பெரியகடை வீதி உப்புக்கிணறு சந்து பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் அஜ்மல் கடையில் வெள்ளிக்கிழமை இருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் நகை வாங்குவதுபோல நடித்து 2 பவுன் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அஜ்மல் அளித்த புகாரின்பேரில் கடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.