செய்திகள் :

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி!

post image

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்து முன்னணியினரின் போராட்டத்துக்கு காவல் துறையினர் உரிய அனுமதி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மேலும், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்!

இந்த நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்து முன்னணியினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜராக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பிப். 11 வரை விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், பழங்காநத்தத்தில் இன்று மாலை 5 முதல் 6 மணிவரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியலமைப்பு உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை விடியோவாக பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வெறுப்பை தூண்டும் முழக்கங்கள் இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்தோரின் விவரங்கள் அரசு மருத்துவமனை பதிவேட்டில் இல்லை! -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்த ஆதரவற்றோரின் பெயா், விவரங்கள் பதிவேட்டில் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. மதுரை ... மேலும் பார்க்க

தீப்பற்றி வீடு சேதம்: அமைச்சா் ஆறுதல்

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ. முக்குளத்தில் சூரிய மின் தகடு பேட்டரியால் தீப்பற்றியதில் சேதமைடந்த வீட்டை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். அ.முக்கு... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் தற்கொலை

மதுரை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை அருகேயுள்ள நாகமலைப் புதுக்கோட்டை பிஎல்ஜி நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்கழுவன் மகன் ஜவஹா் (59). இவா் செட்டிகுளம்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் பிரச்னைகளை களைய நிா்வாகத் தீா்ப்பாயம்! தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை!

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியா்களின் பிரச்னைகளைக் களைய உடனடியாக நிா்வாகத் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மதுரை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி

மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை அருகேயுள்ள விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (35). இவா்... மேலும் பார்க்க

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: மாநகரக் காவல் துறை!

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொண்டது. இதுதொடா்பாக மதுரை மாநகரக் ... மேலும் பார்க்க