செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ் சொல்வதென்ன?

post image

மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் மலையானது முருகன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது.

இத்தகைய சூழலில், கடந்த டிசம்பரில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகத் தர்காவுக்கு ஆடு, கோழியைப் பலியிடச் சென்ற இஸ்லாமியரை போலீஸ் தடுத்து நிறுத்தினர்.

அதைத் தொடர்ந்து, ஜனவரியில் திருப்பரங்குன்றத்துக்குச் சென்ற எம்.பி நவாஸ்கனி மலைப் படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாகச் சர்ச்சை கிளப்பப்பட்டது.

திருப்பரங்குன்றம்

இறுதியில், இந்துக்கள் வழிபடும் முருகர் மலையில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிட்டு அதன் புனிதத் தன்மையைக் களங்கப்படுவதாகவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும் பிரச்னை கிளம்பியது.

பா.ஜ.க-வினரும், இந்துத்துவ அமைப்புகளும் மலையை மீட்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். அது சற்று ஓய்ந்து, மறுபக்கம் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு தரப்பினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புவதாக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கெதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அளித்த புகாரில், அண்ணாமலை மீது BNS 192, 196 (1), 352, 353 (1) (b), 353 (1) (c), 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பியூஷ் மனுஷ், ``திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் 1931 லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்டு முழு மலையும் முருகனுக்குச் சொந்தமானது என்று பொய் பரப்புகிறார்கள்.

பியூஷ் மனுஷ்

ஆனால், அந்தத் தீர்ப்பில் தர்கா, தர்காவுக்குச் செல்லும் பாதை, நெல்லித்தோப்பு ஆகியவை முஸ்லிம்களுக்கானது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு தரப்பினரைத் தூண்டிவிடுவதற்காக இருவரும் பொய்யைக் கூறிவந்தனர்.

இதைத்தான், பிப்ரவரி 19-ம் தேதி கமிஷனர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் புகாராக அனுப்பினேன். மார்ச் 19-ம் தேதி போலீஸார் என்னை அழைத்து விசாரித்து எழுத்துபூர்வமாக புகார் பெற்றுக்கொண்டு அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

அடுத்தகட்டமாக போலீஸ் தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைதுசெய்வார்கள்" என்று தெரிவித்தார்.

``தோல்வியே அறியாத முடிசூடா மன்னன் நான்; பாஜக-வால் தோற்றுவிட்டேன்" - ஜெயக்குமார் ஓப்பன் டாக்

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க

`மாநகராட்சியாக மாறும் புதுச்சேரி நகராட்சிகள்!' – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவாதமும், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தும் வருகின்றனர். ... மேலும் பார்க்க

`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க

மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இந்த ரஹூல் கனல்?

மும்பையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கார் ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த காமெடி ஷோவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை காமெடி நடிகர் குனால் கம்ரா துரோகி என்று விமர்சித்து மிமிக்ரி பாடல் ஒ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த... மேலும் பார்க்க

`நான் கறுப்பு, என் கணவர் வெள்ளை என விமர்சித்தனர்'- ஆதங்கப்பட்ட கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்

கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர், டாக்டர் வி.வேணு-வின் மனைவி சாரதா முரளிதரன். கேரளா அரசின் பிளானிங் அடிஷனல் சீஃப் செக்கரட்டரியாக இருந்த சாரதா முரளிதரன், தனது கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேத... மேலும் பார்க்க