செய்திகள் :

திருப்பாவை

post image

திருப்பாவை – 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீா்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்காா்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்

கள்ளம் தவிா்ந்து கலந்தேலோா் எம்பாவாய்

விளக்கம்: பறவையின் உருவில் வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்தெறிந்வனும், பொல்லாங்கு செய்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் எளிதாகக்கிள்ளி எறிந்து வம்சம் அழியச் செய்தவனுமான பெருமானின் புகழ்மிகுந்த வீரசரிதைகளைப் பாடிக் கொண்டே சிறுமியா் எல்லாரும் பாவை நோன்புக்குரிய இடத்திற்குப் போய்ச் சோ்ந்தனா். வெள்ளியாகிய சுக்கிரன் உதித்து, பிரகஸ்பதியாகிய வியாழனும் மறைந்து விட்டது. கூட்டிலிருந்து வெளிப்பட்ட பறவைகளும் ஒலியெழுப்பிக் கொண்டே இரைதேடும் பொருட்டுப் பறந்து சென்றன. பூவில் வண்டுபடிந்தாற் போன்ற அழகிய கண்களை உடையவளே! பாவை போன்ற அழகியே! நீ இந்த நல்ல நாளில் நம் உடம்பு வவ்வலிடும்படி (அதாவது குளிரால் உடம்பு வளைந்து குனிந்து நடுங்கும்படி) துளைந்து நீராடாமல் படுக்கையில் கிடப்பாயோ? குள்ளக்குளிர – ஒருவகைக் குறிப்பிடைச் சொல்.

சினிமாவிலிருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு, வருண் தவான் என பல ... மேலும் பார்க்க

ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட்!

கேம் சேஞ்சர் படத்திற்காக நடிகர் ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட் வைத்துள்ளனர்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10... மேலும் பார்க்க

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் கொனேரு ஹம்பி வெற்றி!

நியூயார்க்கில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி (37) ஃபிடே... மேலும் பார்க்க

வணங்கானிலிருந்து சூர்யா விலகியது ஏன்? பாலா விளக்கம்!

நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்.இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்ற... மேலும் பார்க்க

2024 விளையாட்டு

ஜனவரி17: டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்திய தமிழ்நாட்டின் ஆர்.பிரக்ஞானந்தா, ஃபிடே லைவ் ரேட்டிங்கில் செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்தை (27... மேலும் பார்க்க

தமிழ் சினிமா 2024

ஜனவரி6: தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் கலந்... மேலும் பார்க்க