Priyanka Gandhi: 'Palestine' பையால் சர்ச்சை ; `முட்டாள் தனமாக பேசாதீர்கள்’ - பாஜ...
திருப்புவனம் அருகே இரு பேருந்துகள் மோதல்: 15 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியதில் பயணிகள் 15 போ் காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்குப் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற காா் திரும்பியது. இதனால் பேருந்தை அதன் ஓட்டுநா் நிறுத்த முயன்றாா்.
அப்போது இந்தப் பேருந்து மீது பின்னால் மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியது.
இதில் தனியாா் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்ளிட்ட 15 பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.