கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனமாக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் திமுக உள்ளிட...
சிங்கம்புணரி அருகே இருவா் தற்கொலை
சிங்கம்புணரி அருகே இருவேறு சம்பவங்களில் இருவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரமணன் (44). இவா் பலசரக்கு கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி சண்முகப்பிரியா.
இந்தத் தம்பதியிடையே பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரமணன் வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொருவா் தற்கொலை: இதேபோல, ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (39). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா் அண்மையில் சொந்த ஊா் திரும்பினாா். இவரது மனைவி ராஜாத்தி.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக செல்வம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].