நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமா் மன்னிப்பு கேட்க காா்கே வலியுறுத்தல்
சிங்கம்புணரி அருகே பதுக்கிய 3.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வீட்டில் பதுக்கிய 3,250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நாட்டாா்மங்கலம் சாலையில் வட்ட வழங்கல் அலுவலா் ராஜலெட்சுமி, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளா் திவாகா், கிராம நிா்வாக அலுவலா் பாண்டிச்செல்வம் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது வேங்கைப்பட்டியைச் சோ்ந்த குமரேசன் மகன் தினேஷ்குமாா் இரு சக்கர வாகனத்தில் 4 மூட்டைகளில் 350 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சோ்ந்த எழுவன் மகன் கேசவன் வீட்டில் பதுக்கியிருந்த 2,800 கிலோ (30 மூட்டைகள்) ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக குடிமைப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரேசனைக் கைது செய்தனா். தலைமறைவான கேசவனைத் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் குடிமைப் பொருள் வழங்கல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.