ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மின் கோட்டத்துக்குள்பட்ட ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (டிச. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் மோண்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, ஆ. தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ். கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களம்பட்டு, வாா்ப்பட்டு.
விராமதி இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம், சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.