செய்திகள் :

திருப்பூர்: ரிதன்யா தற்கொலை வழக்கு; `கணவர் குடும்பத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது'- நீதிமன்றத்தில் மனு

post image

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை, கணவரின் உடல்ரீதியான சித்ரவதை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற இளம்பெண் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கவின்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீது இடைக்கால மனு தாக்கல் செய்த ரிதன்யா தரப்பு வழக்கறிஞர், கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரியுள்ளனர்.

ரிதன்யா

இது குறித்து ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த சம்பவத்தில் கைது செய்த சில நாள்களிலேயே ஜாமீன் கூறி எதிர்த்தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கூடாது என பெற்றோர் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு நடைபெறும். வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு இருக்கிறது. வெறும் தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், மாற்றம் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா செல்போனில் பேசிய ஆடியோ வாக்குமூலங்களாக பதிவு ஆகவில்லை.

ரிதன்யா

காவல்துறை வழக்கு விசாரணையை மட்டுப்படுத்துகிறது. மூன்றாவது குற்றவாளியான கவின்குமாரின் தாய் சித்ராதேவியை போலீஸ் அழைத்துச் சென்று விடுவித்ததாக சொல்கிறார்கள். மூன்றாவது குற்றவாளியை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரம் தெரியவரும். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். புகார்தாரர் கொடுக்கும் முழு விவரங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் போலீஸார் செயல்படுகின்றனர். எனவே, இந்த விளக்கை சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்" என்றார்.

`மீண்டும் வருவேன்' பார்சல் கொண்டுவந்த கூரியர்பாய்; தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

உணவு, தபால், பொருள்கள் என எதாவது ஒரு பொருளை டெலிவரி செய்ய டெலிவரிபாய்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது இன்று வழக்கமாகிவிட்டது. புனே கொண்ட்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒருவர் கூரியர் டெல... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு Good touch, Bad touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில... மேலும் பார்க்க

`அஜித்குமார் உடலில் 50 காயங்கள்; சிகரெட்டால் சூடு, சித்திரவதை..' - பதற வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன்

"என்னை திருமணம் செய்துவிட்டு பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஒரே நாளில் ஓடியவர்தான் நிகிதா..." என்று முன்னாள் கணவரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவருமான திருமாறன் தெரிவித்துள்ளது பரபர... மேலும் பார்க்க

கடலூர்: `என் வீடு என் காதலிக்குத்தான்!’ - கறார் காட்டிய கணவரை கடப்பாரையால் குத்திக் கொலைசெய்த மனைவி

கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகர் பி-2 மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்த 62 வயது கொளஞ்சியப்பன், என்.எல்.சி-யில் ஊழியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திரா நகரில் உள்ள த... மேலும் பார்க்க

13 வயது சிறுவன் கடத்திக் கொலை; கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித... மேலும் பார்க்க