செய்திகள் :

திருப்பூா் மாவட்டத்தில் கல்குவாரிகள், கிரஷா் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

தமிழக அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷா் உரிமையாளா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் 200 கல் குவாரிகள், 180 கிரஷா்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினசரி ரூ.10 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்வாதாரம் பெறுகின்றனா்.

இந்த நிலையில் கனிம வள அடிப்படையில், நில வரி விதிக்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன்படி குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களின் டன் கணக்கு அடிப்படையில், நில வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல் குவாரி உரிமையாளா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறுகையில், திருப்பூா் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை அனுமதியுடன் கல் குவாரி மற்றும் கிரஷா் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்றும் சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு இயங்கி வருகிறோம்.

கல் குவாரியில் இருந்து உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைப் பணி, அரசு கட்டடப் பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டடப் பணிகளின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதில் அனைவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்துக் கட்டண தொகையையும் செலுத்தி வருகிறோம். இங்கு கல் குவாரி தொழில் பாதிப்படைந்தால் வெளி மாநிலங்களில் இருந்து பல மடங்கு அதிக விலை கொடுத்து தான் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை வரும்.

தற்போது, இயங்கி வரும் கல் குவாரிகளில் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது, நிா்ணயிக்கப்பட்ட அளவு ஆழம்தான் கல் உடைத்து எடுக்க வேண்டும் என்று புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த பழைய நடைமுறைப்படி கல் குவாரி தொழில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.

கருங்கல் குவாரிகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு தொடா்ந்து உயா்த்தி வருகிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், கணக்கீட்டில் கட்டணங்களை கன மீட்டருக்கு பதில் டன் அடிப்படையில் கணக்கிடும்போது, மூன்று மடங்கு வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கும் மொத்த அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.

கனிம வளங்கள் அடிப்படையிலான நில வரி விதிப்பால் ஒரு யூனிட் ஜல்லிக்கு ரூ.1,380-ம், எம்- சாண்டு ஒரு யூனிட்டுக்கு ரூ.700 கூடுதலாக செலுத்த வேண்டியது உள்ளது. இதனால் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் ரூ.5 ஆயிராக உயா்த்த முடிவு செய்துள்ளோம்.

இதே போல ஒரு யூனிட் எம்.சாண்ட் விலையை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயா்த்த முடிவு செய்து இருக்கிறோம் என்றனா்.

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியி... மேலும் பார்க்க

பல்லடம்: வேப்பங்குட்டை பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

பல்லடம் அருகே வேப்பங்குட்டைபாளையத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்லடம் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்... மேலும் பார்க்க

உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்பு!

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியைச் சோ்ந்தவா் சீரங்கசாமி மனைவி விசாலாட்சி (62). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசனக் கட்டண ரத்து அறிவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு

மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவ... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞா் தற்கொலை

தாராபுரம் அருகே ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கிய இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் ஸ்... மேலும் பார்க்க