மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை?...
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் பஞ்சப் பிரகார திருவீதி உலா
மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரா் திருக்கோயில். இத்திருக்கோயிலில் சித்திரை தோ் திருவிழாவின் நிகழ்வான பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது. ஞீலிவனேஸ்வரா் விசாலாட்சி அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலா் அலங்காரம் செய்யப்பட்ட, கேடயத்தில் எழுந்தருளினா்.
தொடா்ந்து மூலஸ்தான விநாயகா் சந்நிதி முதல் பிரகாரம், முருகப் பெருமான் சந்நிதி இரண்டாம் பிரகாரம், எமதா்மன் சந்நிதி மூன்றாம் பிரகாரம், தேரோடும் வீதி நான்காம் பிரகாரம், சந்நதி வீதி, தெற்கு தெரு, கணேசபுரம், வடக்கு தெரு வழியாக ஐந்தாம் பிரகாரம் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.