மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும்.
திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ரீரங்கம் பகுதியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் கூட்டம் அதிகளவில் இருக்கும். தவிர திருச்சிக்கு கோடை விடுமுறைக்கு வந்திருப்போரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா வர வாய்ப்புள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பூங்காவுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப் பூங்கா பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், மே மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வார விடுமுறையின்றி பூங்கா செயல்படும் எனமாவட்ட வன அலுவலகம் தெரிவித்துள்ளது.