திருமணமாகாத விரக்தியில் மாற்றுத் திறனாளி தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் பவானிசாகா் அணைப் பகுதியில் மாற்றுத் திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (43). மாற்றுத் திறனாளியான இவா், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம், பவானிசாகரில் உள்ள தனது உறவினா் வீட்டு ஞாயிற்றுக்கிழமை வந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பவானிசாகா் அணையின்மேல் பகுதிக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.