செய்திகள் :

திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவ்னி ஜோடி!

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி ஜோடி தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.

சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சியின் பங்கேற்ற சக போட்டியாளரான நடன கலைஞர் அமீருடன் நட்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ‘காந்தா’ புதிய போஸ்டர்!

இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவ்னியை ஒருதலைபட்சமாக அமீர் காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் அமீரின் காதலை ஏற்காத பாவ்னி, வெளியே வந்தவுடன் இவர்களின் நட்பு காதலாக மாறியது.

தொடர்ந்து, 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், காதல் நாளான நேற்று(பிப். 14) தங்களது திருமண தேதியை அறிவித்தனர். வரும் ஏப். 20 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுழல் - 2 டிரைலர்!

சுழல் - 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடரான சுழல் கடந்த 2022 ஜூன் 17-ஆம் த... மேலும் பார்க்க

காஸ்டிங் அழைப்புகளா? தனுஷ் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக யாரையும் அழைக்கவில்லை என தனுஷின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.3 படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷின் உண்ட்ர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து எதிர்நீச்... மேலும் பார்க்க

ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?

ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி வருவது இந்த நவீன காலத்தில் மிகப்பெரிய, அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம்..ஒரு காலத்தில் ஒரு ஊருக்கு ஒரு வீட்டில் தொலைபேசி இருக்கும். அ... மேலும் பார்க்க

20 கிலோ எடையைக் குறைத்த ஆண்டனி வர்கீஸ்!

நடிகர் ஆண்டனி வர்கீஸ் தன் உடல் எடையைக் குறைத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.பெபே (pepe) என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஆண்டனி வர்கீஸ். அங்கமாலி டயரிஸ், அஜகதந்திரம், ஆர்டிஎக்ஸ் படங்களில் நடித... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.19-02-2025புதன்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இருபால் இந்திய அணிகள் தோல்வி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில், இந்திய மகளிா் அணி - ஸ்பெயினிடமும் (3-4), இந்திய ஆடவா் அணி - ஜொ்மனியிடமும் (1-4) செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டன.இதில் மகளிா் அணி ஆட்டத்தில், முதலில் இந... மேலும் பார்க்க