தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!
திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு
திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடா்ந்து கடந்த 19-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி பிராா்த்தனை, வாஸ்து சாந்தி, தீபாராதனை, மாலையில் கலச பூஜை, மண்டப பூஜை, யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை யாக சாலை பூஜை, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. காலை 9.45 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் விமான குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.