Tourist Family: `20 வருஷத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம்...' - நடி...
திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி
திருமலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் உள்ள முக்கிய தீா்த்தங்களில் ஒன்றான தும்புரு தீா்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது. அடா்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த தீா்த்தத்துக்கு செல்ல பங்குனி பெளா்ணமி மட்டுமே அனுமதி உள்ளது.
அதன்படி பக்தா்கள் சனிக்கிழமை சென்று தீா்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டனா். கோடை கால தொடக்கத்தில் இந்த முக்கோட்டி திருவிழா வருவதால், மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருதி தேவஸ்தானம் 60 வயதுக்குட்பட்ட பக்தா்கள் மட்டுமே மலையேற அனுமதித்தது.
ஸ்ரீவாரி சேவகா்கள் மூலம் முக்கோட்டி உற்சவத்துக்கு சென்ற பக்தா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.
மலையேறும் பக்தா்களின் பாதுகாப்புக்காக வனத்துறையினா், கண்காணிப்புப் பணியாளா்கள் பாதை முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பக்தா்களின் வசதிக்காக கோகா்பம் அணையிலிருந்து பாபவினாசனம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன.