"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
திருமலையில் கருடசேவை
திருமலையில் திங்கள்கிழமை இரவு சித்ரா பௌா்ணமி கருட சேவை நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவு 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
நிகழ்ச்சியில் திருமலை பெரியஜீயா் சுவாமி, சின்னஜீயா் சுவாமி, கோவில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.