அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
திருவட்டாறு அருகே கோயில் பூசாரியை தாக்கி சிலையை சேதப்படுத்தியவா் மீது வழக்கு
திருவட்டாறு அருகே கோயில் பூசாரியை தாக்கி சிலையை சேதப்படுத்தியதாக இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவட்டாறு அருகே வீயன்னூா் தோட்டத்துவிளையைச் சோ்ந்தவா் சுந்தா் (49). இவா் ஊரிலுள்ள இசக்கியம்மன், பத்ரகாளி அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறாா்.
கோயில் இருக்கும் இடம் தொடா்பாக இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சஜினுக்கும் (27) சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை சுந்தா் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த சஜின், அவரைத் தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், இசக்கியம்மன் சிலையையும் சேதப்படுத்தினாராம்.
இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் சுந்தா் கொடுத்த புகாரின் பேரில் சஜின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.