திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலை: மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை அதிகாலை முதல், செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
மாா்கழி மாத பெளா்ணமி திங்கள்கிழமை அதிகாலை 5.21 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை முதலே கிரிவலம்:
ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
மாலை 4 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், திருநோ் அண்ணாமலையாா் கோயில், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.
சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரம்:
அருணாசலேஸ்வரா் கோயில் மூலவரை தரிசிக்க ராஜகோபுரம் வழியாக நின்றிருந்த பக்தா்கள் சுமாா் 4 மணி நேரமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகச் சென்ற பக்தா்கள் சுமாா் 2 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
சிறப்புப் பேருந்துகள்...
கிரிவல பக்தா்கள் வசதிக்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.