செய்திகள் :

திருவண்ணாமலை: பள்ளி மாணவன் துடைப்பத்தால் தாக்கப்பட்ட விவகாரம் - சத்துணவு பணியாளர்கள் இருவரும் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட செங்குணம் கொல்லைமேடு பகுதியில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவ - மாணவிகளுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை சத்துணவு தயாரிக்கும் பெண் பணியாளர்களே வெளியில் விற்பனை செய்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்தச் சூழலில், அந்த அரசுப் பள்ளியில் சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு `இல்லை’ எனச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்து கேள்வியெழுப்பியிருக்கிறான்.

இதனால் கோபமடைந்த சத்துணவு சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் முனியம்மாள் ஆகிய இருவரும் வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தால் தாக்கிய காணொளியும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பெண் பணியாளர்கள்

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, சத்துணவு பணியாளர்கள் இருவரும் தங்களின் தவறை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் அவர்கள் இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், பெண் பணியாளர்கள் இருவர் மீதும் பி.என்.எஸ் சட்டப்பிரிவு 131 மற்றும் சிறார் பராமரிப்புப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 75 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, போளூர் காவல் நிலையப் போலீஸாரால் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Waqf: `முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறிவைக்கிறது பாஜக...' - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரச... மேலும் பார்க்க

Waqf: ஒப்புதல் வழங்கிய முர்மு; நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்த மசோதா; முக்கிய திருத்தங்கள் இவைதான்!

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை, 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க

Modi TN Visit: பாம்பன் பாலம் திறப்பு `டு' ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் - மோடி விசிட் அப்டேட்ஸ்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, இன்று மதியம் ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி. ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி தரிசனம், பூஜை செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ரா... மேலும் பார்க்க

"ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்க இயலாதென எங்கு கூறப்பட்டிருக்கிறது?" - உச்ச நீதிமன்றம் கேள்வி!

வங்கிக் கணக்கோடு ஆதார் இணைக்காததைக் காரணம் காட்டி, 5,097 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்வாதார இழப்பீட்டை ரத்து செய்தது டெல்லி அரசு. டெல்லி அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீத... மேலும் பார்க்க

Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' - பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்

டெல்லிக்குஅ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி... என... மேலும் பார்க்க

``ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..'' - நிர்மலா சீதாராமன் விளக்கம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’என்ற அஜண்டாவை பா.ஜ.க தீவிரமாக நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. இன்னொரு புறம், ‘இது நடைமுறைச் சாத்தியமற்றது. கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. மோடி... மேலும் பார்க்க