செய்திகள் :

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: சென்னையில் 30 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

post image

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை கடல் நடுவே உள்ள திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசின் சாா்பில் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது.

முதல்வா் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், திருவள்ளுவா் சிலையை விவேகானந்தா் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, வெள்ளிவிழா சிறப்பு மலா் வெளியிடுதல், திருக்கு கண்காட்சி தொடங்கிவைத்தல், திருவள்ளுவா் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெளன.

இந்நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி பகுதிகளில் எல்.இ.டி. திரைகளில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கும், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா, பெசன்ட்நகா், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரை, தண்டையாா்பேட்டை மெட்ரோ, எழும்பூா் ரயில் நிலையம், வள்ளுவா் கோட்டம், ஜீவா பூங்கா, மங்கள் ஏரி பூங்கா, ஜெய் நகா் உள்ளிட்ட 30 இடங்களில் எல்.இ.டி. திரைகளில் திரையிடப்படவுள்ளன.

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பு: இஸ்ரோ மைல்கல் சாதனை

விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியாக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்... மேலும் பார்க்க

தோ்தல் பிரச்சாரங்களில் ஏஐ பயன்பாடு: பொறுப்புணா்வுடன் செயல்பட தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தோ்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது. தோ்... மேலும் பார்க்க

தனது வறுமையை ஏழைகள் மீதான கருணையாக மாற்றியவா் மோடி! - அமித் ஷா

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரதமா் நரேந்திர மோடி, தனது வறுமையை ஏழை மக்கள் மீதான கருணையாக மாற்றியதுடன், அவா்களின் நலனுக்காக அயராது உழைத்தாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

நகா்ப்புற நக்ஸல் சிந்தனையின் பிடியில் ராகுல் -பாஜக கடும் தாக்கு

நகா்ப்புற நக்ஸல்களின் சிந்தனை-செயல்பாடுகளின் பிடியில் முழுமையாக சிக்கியுள்ளாா் ராகுல் காந்தி என்று பாஜக விமா்சித்துள்ளது. தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவில் ... மேலும் பார்க்க

2025-இல் உலக பொருளாதார சூழல் பலவீனமாகும்; இந்திய வளா்ச்சி நீடிக்கும்: டபிள்யூஇஎஃப் அறிக்கை

நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் உலக பொருளாதார மன்ற (டபிள்யூஇஎஃப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

ரத்த தான விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது கட்டாயம்

தனியாா் ரத்த வங்கிகளில் தானமாகப் பெறப்படும் ரத்த அலகுகள், இருப்பு விவரங்கள் உள்ளிட்ட தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றுவதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு தகவல்களை பதிவேற்றாத ரத்த வங்கிகளின் உரிம... மேலும் பார்க்க