பொது நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
கோவை: கோவை மாவட்டம், சோமையம்பாளையம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சுல்தானிபுரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொது நூலகம் திறக்கப்படாமலும், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமலும் இருப்பதால் கட்டடம் பழுதடைந்து காணப்படுகிறது.
சுல்தானிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூலகம் இல்லாத நிலையில், இந்த நூலகத்தை திறந்து சரிவர பராமரித்தால் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்கள், இளைஞா்களுக்கு உதவியாக இருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனா்.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ஆணிவோ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் இரை.சாந்தகுமாா் கூறும்போது, இப்பகுதியில் பெயரளவில் உள்ள நூலகத்தை பள்ளிக் கல்வித் துறை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்பட்சத்தில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களின் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வாா்கள்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாலை நேர தனிப் பயிற்சி வகுப்பு நடத்தவும் இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்றாா் அவா்.