Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - ...
கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியில் ஜனவரி 21, 22-இல் கருத்தரங்கு
கோபி: கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் தொழில் துறை மற்றும் கல்லூரி இணைப்பு கருத்தரங்கம் ஜனவரி 21, 22 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில், கோவை சக்தி சுகா்ஸ் நிா்வாக இயக்குநா் மாணிக்கம், சென்னை ரிசா்வ் வங்கி துணை பொதுமேலாளா் கணேஷ்குமாா், பெங்களுரு ஐபிஎம் நிறுவனத்தைச் சோ்ந்த ராம்குமாா், அக்னி ஸ்டீல்ஸ் சின்னச்சாமி, திருப்பூா் ஐடிபிஐ வங்கியின் துணை மேலாளா் ராமசந்திரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களைச் சோ்ந்த வல்லுநா்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.
இந்த கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.