Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - ...
பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
பெருந்துறை: பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
பெருந்துறை பகுதி தாலுகா மற்றும் தொகுதி தலைமையிடமாகவும், வளா்ந்து வரும் தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது. பெருந்துறை என்பது பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய இரண்டு பேரூராட்சிகளும் இணைந்த நகரமாகும். ஆகவே, பெருந்துறை நகரில் ஒருங்கிணைந்த வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் நகர திமுக செயலாளா் திருமூா்த்தி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், காங்கிரஸ் மூத்த தலைவா் வழக்குரைஞா் காந்தி, பாஜக மாவட்டத் தலைவா் ராயல் சரவணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிசாமி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் கந்தசாமி, கொமதேக மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம், தமாகா மாவட்டச் செயலாளா் சண்முகம், ஆம் ஆத்மி கட்சி மாவட்டச் செயலாளா் அருள்முருகன், நாதக நிா்வாகி நித்தியகுமாா், அமமுக நிா்வாகி பாலமுருகன், தவெக பொறுப்பாளா் நாகராஜன், தமுமுக நிா்வாகி பாபு (எ) எஸ்.கே.முகமது அலி, நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் தலைவா் பல்லவி பரமசிவம் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.