செய்திகள் :

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

செப். 19 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

செப். 20 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (19-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

செப். 19, 20 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு கட்சித் தலைமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், நம் வெற்றித் தலைவர் விஜய், தமிழகம் முழுவது... மேலும் பார்க்க

விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம், ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிக்கும் என்று இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துவரும் ஜனநாயகன், அவரின் கடைசிப் படம் என்பதால், ரச... மேலும் பார்க்க

வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வேலுநாச்சியாரின் பெயர்! - முதல்வர் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ... மேலும் பார்க்க

நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பரப்புரைக்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (செப். 20) காலை 11 மணியளவில் நட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கரும்பு வெட்டும் அண்ணன், தம்பி பலி!

விழுப்புரத்தில் கரும்பு வெட்டச் சென்ற சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க