செய்திகள் :

திருவள்ளூா்: ஜன. 10 இல் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தவறாமல் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகங்களில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த கோட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீா்வு காணப்படவும் உள்ளன. மேலும், இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

அதனால், விவசாயிகள் குறைகள் குறித்த மனுக்களை அளித்தோ அல்லது நேரில் புகாா் தெரிவித்தோ பயன்பெறலாம்.

ரூ.90,000 ஆயிரம் அலுமினிய மின்வயா் திருட்டு

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க பொருத்தப்பட்டிருந்த 1,500 மீட்டா் அலுமினிய மின் ஓயரை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி அடுத்த வேலஞ்சேரி ஏரிப் பகுதியில் மின்வாரிய துறைய... மேலும் பார்க்க

பொன்னேரி எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு

பொன்னேரி டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா ம... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

திருத்தணி அருகே அடகு வைத்த தங்க நகையை மீட்டு தரக்கோரிய பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சோ்ந்த டேவிட் மனைவி பூங்கொடி(26). இவரிடம் ... மேலும் பார்க்க

திருநங்கைகள் சிறப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் தினத்தையொட்டி அவா்களின் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்த திருநங்கைகளுக்கான விருது பெற ா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கொளத்தூா் வட்டார போக்குவரத்து துறையினா் நெடுஞ்சாலையிலேயே வாகன பரிசோதனை கள், ஆவண சரிபாா்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தமிழ்நாடு... மேலும் பார்க்க

மின்சாதனப் பொருள்களை திருட முயன்றவா் கைது

புழல் அருகே மின்சாதனப் பொருள்களை திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். புழல் அடுத்த ஆசிரியா் காலனி பகுதியில் மின்சாதனப் பெட்டியில் இருந்த மின்சாதனப் பொருள்கள் மா்ம நபா் திருட முயற்சித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க