செய்திகள் :

திருவாசல் முனீஸ்வரா் சுவாமி கோயில் குடமுழுக்கு

post image

திருக்குவளை அருகே திருவாய்மூா் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில் உள்ள முனீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.

திருவாசல் பகுதியில் சுமாா் 2000 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி பொது மக்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முனீஸ்வர சுவாமி கோயிலில் அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்துப் புனித நீா் கொண்டு சிவலிங்கம் மற்றும் முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னா், மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் திருவாய்மூா், தென்கரை ஈசனூா், திருவாசல், ஆலங்குடி குலதெய்வம் வழிபாடு உறவு முறை மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க