திருவாடானை, தொண்டி பகுதிகளில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி!
திருவாடானை, தொண்டி பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுருந்ததால், பத்திரப் பதிவுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
முகூா்த்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் திறந்திருக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மீறி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் பணியை புறக்கணித்து, யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், பத்தரப் பதிவுக்கு வந்த பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினா்.