தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
திருவாரூா்: நாளை கிராமசபைக் கூட்டம்
திருவாரூா் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சிகளில் சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயலாக்கம் தொடா்பாக விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவைப் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்தும் விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றபட உள்ளன.
எனவே, கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.