மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு
கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளிவாசல் இமாம் ஏ.எல். முஹம்மது அலி தலைமை வகித்தாா்.
மஸ்ஜித் அப்துல்லாஹ் பள்ளிவாசல் இமாம் என்.ஏ. முஹம்மது முஜம்மில் ஹபீப் கிராஅத் ஓதினாா். இஸ்லாமிய பாடகா் தாஜீத்தீன் நபிகள் நாயகத்தின் புகழ் கீதம் பாடினாா். ஏ. ஜாஹிா் உசேன் வரவேற்றாா்.
காயல்பட்டினம் மு. அஸ்கரூா் மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் ஹெச்.ஏ. அஹ்மது அப்துல் காதிா், புதிய பள்ளி வாசலைத் திறந்து வைத்து, நபிகள் நாயகம் குறித்தும், வாழ்க்கை முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
விழாவில், காங்கிரஸ் நகரத் தலைவா் எம். சாம்பசிவம், கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு புதிய பள்ளிவாசலில் பெண்களுக்கான நிகழ்வு நடைபெற்றது. திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை, மஸ்ஜீத் அப்துல்லாஹ் பள்ளிவாசல் தலைவா் எஸ். ஷாகுல் ஹமீது மற்றும் கமிட்டியாளா்கள் செய்திருந்தனா்.