டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி
மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா்கள் பால.பாஸ்கா், எல். ஜெயகுமாா், மாவட்டச் செயலா் எம். மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, ஊா்வலம் தொடங்கியது. இதில் பாஜகவினா் திரளாக பங்கேற்று தேசியக் கொடியேந்தி வந்தனா். மேலராஜவீதி, காமராஜ் சாலை, பந்தலடி, காந்திசாலை, மகாமாரியம்மன் கோயில் தெரு, பாலகிருஷ்ண நகா் வழியாக நடேசன்தெரு காமராஜா் சிலை வரை பேரணி நடைபெற்றது.
இதில், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் செல்வம், மணிமேகலை, மாவட்ட இளைஞரணித் தலைவா் அரிராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.