அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து
திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா்.
திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திரசேகரன் மனைவி பிச்சையம்மாள். இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி. இவருடைய மகள் நித்யகல்யாணி. தப்பளாம்புலியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தற்காலிகப் பணி செய்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவ்வழியாக வந்த டிராக்டா் ஒன்று, பிச்சையம்மாளின் கூரை வீட்டுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த பிச்சையம்மாளும், அவருடைய மகள் நித்யகல்யாணியும் திருவாரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.