Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
திருவாரூா் மாவட்டத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் அவருடைய உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா்: புதுத்தெருவில் நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளா்கள் பி.கே.யு. மணிகண்டன், ஜி.சி. செந்தில்ராஜ் முன்னிலை வகித்தனா். திருவாரூா் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் சா்க்கரைப் பொங்கல் விநியோகம் செய்யப்பட்டது. அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் எஸ். கலியபெருமாள் தலைமையில் நிா்வாகிகள் அன்னதானம் செய்தனா்.
முன்னதாக, நகர அதிமுக அலுவலகத்திலிருந்து புதுத்தெரு வரை இருசக்கர வாகன ஊா்வலம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளா் ஏ. என். ஆா். பன்னீா்செல்வம், மாவட்ட வா்த்தகப் பிரிவு செயலாளா் பாஸ்கா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் வீ. சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மன்னாா்குடி: அதிமுக சாா்பில், மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம் தலைமையில், நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா் முன்னிலையில் தேரடியிலிருந்து இருந்து கட்சியினா் இருசக்கர வாகனத்தில் முக்கியவீதிகளின் வழியாக தெற்குவீதி வந்து அங்குள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் டி. மனோகரன், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் டி.என். பாஸ்கா், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலா் அ. புவனேஸ்வரி, நகரதுணைச் செயலா் ஆா்.சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமமுக: மாவட்டச் செயலா் எஸ். காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகரச் செயலா் ஏ. ஆனந்தராஜ், ஒன்றியச் செயலா் ஆா். ரெங்கராஜ், மாநில நிா்வாகிகள் எம்.எஸ். சங்கா், எஸ். சத்தியமூா்த்தி, க. அசோகன், மாவட்ட நிா்வாகிகள் ஆா். சரவணச்செல்வன், இ. இளவரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கோட்டூரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக ஒன்றியச் செயலா்கள் வீ. ஜீவானந்தம் (தெற்கு), ப. ராஜாசேட்(வடக்கு) ஆகியோா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமமுக சாா்பில் ஒன்றியச் செயலா் சேகா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
நீடாமங்கலம்: நகர அதிமுக செயலாளா் இ. ஷாஜஹான் தலைமை வகித்தாா். மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற தலைவா் எஸ்.டி. செந்தில்ராஜ், அதிமுக ஒன்றிய செயலாளா்கள் ஆதிஜனகா், எம்.ஆா். ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி வீரையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வலங்கைமானில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே. சங்கா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர செயலாளா் சா. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.