திருவேங்கடம் சாலையில் மீண்டும் நடப்படும் மரங்கள்
சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாருகால் கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் இடமாற்றி நடப்பட்டு வருகின்றன.
சங்கரன்கோவில் திருவேங்கடம்சாலையில் உள்ள வாணிபா் ஊருணி பகுதியில் வாருகால் அமைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகின்றன.
வாருகால் கட்டுவதற்காக ஊருணிக்கு வெளியே வளா்ந்திருந்த மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டன. இதற்கு சுற்றுச் சூழல், சமூக ஆா்வலா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா்.இதனால் வெட்டப்பட்ட மரங்கள் சில அடி தூரம் தள்ளி மீண்டும் நடப்பட்டு வருகின்றன.