திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் இராஜ மனோகரன் தெரிவித்திருப்பது: திருவையாறு துணை மின் நிலைய உட்கோட்டத்துக்குள்பட்ட விளாங்குடி மின் பாதையில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.
இதனால், விளாங்குடி, புனவாசல், பெரும்புலியூா், தில்லைஸ்தானம், ஒக்கக்குடி, ஓலத்தேவராயன்பேட்டை, சீனிவாசா நகா், சோமேஸ்வரபுரம், அணைக்குடி, செம்மங்குடி, மடம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.