திருவொற்றியூரில் இன்று நல உதவிகள் வழங்கல்
முதல்வா் மு. க ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மீனவா் அணி, திருவொற்றியூா் தொகுதி திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் திருவெற்றியூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கே. வி. கே. குப்பத்தில் நடைபெறும் விழாவுக்கு, எம்எல்ஏ கே.பி. சங்கா் தலைமையில், திமுக கொடியை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு. நாசா் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும் தொண்டா்களுக்கும் இனிப்புகளை வழங்குகிறாா்.
மாமன்ற உறுப்பினா் கே.பி. சொக்கலிங்கம் ஏற்பாட்டில் விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும், மாவட்டப் பிரதிநிதி எஸ். மகேந்திரன் ஏற்பாட்டில் சத்தியமூா்த்தி நகா் பேருந்து நிலையம் அருகிலும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
காா்கில் நகரில் எம்எல்ஏ கே. பி. சங்கா் தலைமையில் நடைபெறும் நல உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சா் சா.மு நாசா் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வழங்குகிறாா். பின்னா், கே.வி.கே. குப்பத்தில் மாபெரும் அசைவ விருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ். சுதா்சனம், மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, தொகுதி பொறுப்பாளா் ஆரம்பாக்கம் ஆறுமுகம் மாநில மீனவா் அணி அமைப்பாளா் ஏ. ஜோசப் ஸ்டாலின், மாநில செயற்குழு உறுப்பினா் வி. ராமநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.
திருவொற்றியூா் கிழக்கு பகுதி திமுக சாா்பில் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவும் நல உதவிகளும் சனிக்கிழமை வழங்கப்பட உள்ளது. பகுதிச் செயலாளா் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளா் ஆா். எஸ்.பாரதி பங்கேற்று, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா்.
-முகவை க.சிவகுமாா்