ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! விஜய் குட்டிக் கதை!
திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம் என்று தவெக மாநாட்டில் விஜய் குட்டிக் கதையொன்று தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று(ஆக. 21) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி 5.30 வரை நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் சுமார் 35 நிமிடங்கள் பேசினார்.
அப்போது, அவர் தொண்டர்களுக்கு குட்டிக் கதையொன்று கூறினார். விஜய் பேசும்போது, ”ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக, துணையாக இருப்பதற்காக தளபதியைத் தேடுகிறார். சரியான தகுதிகளோடு 10 பேர் தேர்வாகிறார்கள்.
ஆனால், ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், அதனால் ராஜா என்ன செய்கிறார் என்றால், 10 பேருக்கும் ஒரு போட்டி வைக்கிறார்.
அந்த 10 பேர் கைகளிலும் விதை நெல்லைக் கொடுத்து, மூன்று மாதம் கழித்து வளர்த்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். 3 மாதம் கழித்து ஒருவர் ஆள் உயரத்துக்கும், ஒருவர் தோள் உயரத்துக்கும், ஆக 9 பேரும் விதையைச் செடியாக வளர்த்துக் கொண்டு வந்தனர்.
ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை மட்டும் எடுத்து வந்தார். அவர் ராஜாவிடம் தண்ணீர் ஊற்றியும் பார்க்கிறேன், உரமிட்டும் பார்க்கிறேன், ஆனால் விதை வளரவில்லை என்று கூறினார்.
அதற்கு ராஜா, அவரைக் கட்டிணைத்து நீதான் என் தளபதி, அனைத்து அதிகாரமும் உனக்குதான் என்று கூறினார். அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல், முளைக்காவே முளைக்காது.
அந்த 9 திருட்டுப்பயலுகளும் என்ன செய்து இருக்கிறார்கள் என்றால், வேற விதை நெல்லை வாங்கி, அதை வளர்த்து ராஜாவையும் மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இவர் மட்டும் உண்மைப்போட்டு உடைத்துள்ளார்.
அதுபோல, ஒரு நாட்டுக்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நேர்மையும் உண்மையும் முக்கியம். நீங்கள் அனைவரும் ராஜா, நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்தத் தளபதி....” என்றார்
இதையும் படிக்க: அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!