செய்திகள் :

தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை: பிரதமர் மோடி

post image

தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் 2013-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி இடையில் ஒா் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆட்சிக்கு பின்னா் 2015 முதல் ஆம் ஆத்மி கட்சி அரசு தொடா்ச்சியாக இருந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி அரசை அகற்ற பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மத்திய அமைச்சா்கள் நிகழ் தோ்தலில் பல்வேறு வழிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லி துவாரகா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

”தில்லிக்கு மத்திய, மாநில இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். பின்னர், தில்லியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.

இதையும் படிக்க: ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

தற்போது இரட்டை என்ஜின் அரசை உருவாக்கி, தில்லிக்கு சேவை சேவை செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். பாஜக எந்த அளவிற்கு தில்லியை நவீனமாக்க விரும்புகிறது என்பதை துவாரகாவில் நீங்கள் பார்க்கலாம்.

இங்கு மத்திய அரசு பிரம்மாண்டமாக யஷோபூமியை கட்டியது. யஷோபூமியால் துவாரகா மற்றும் தில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு மக்களின் வணிகம் பெருகியுள்ளது.

வரும் காலங்களில் இப்பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாறும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி எதிா்க்கட்சிகளிடமிருந்து கடுமையான சவாலை எதிா்கொள்கிறது. தில்லி தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியாகும்.

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க

பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி ப... மேலும் பார்க்க

ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ரித்தேஷ், அஷிஷ் மற்றும் அவ்தூத... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஏற்காடும் ஒன்று. இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் சுற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் மாசித் திருவிழா பிப்.20 ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

"நம் ஒரே இலக்கு இதுதான்": பிறந்த நாளில் முதல்வர் உறுதி மொழி

தமிழ்நாட்டின் நலனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என தொண்டர்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்ட... மேலும் பார்க்க