செய்திகள் :

தில்லியில் அதிகபட்சமாக 38.4 டிகிரி செல்சியஸ்; அடுத்த 6 நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு

post image

தில்லியில் அடுத்த ஆறு நாள்களுக்கு வெப்ப அலை நிலைகளை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை கணித்துள்ளது; வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள ஆறு நாள் முன்னறிவிப்பின்படி, ‘தேசிய தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை நிலைகளை அனுபவிக்கும்.

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. நகரின் மற்ற கண்காணிப்பு நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகா் 38.1 டிகிரி செல்சியஸ், லோதி சாலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பாலம் 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஈரப்பதத்தின் அளவு பகலில் 47 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. சனிக்கிழமையில் வானிலை அலுவலகம் தனிமைப்படுத்தப்பட்ட வெப்ப அலை நிலைமைகளுடன் வலுவான மேற்பரப்பு காற்று வீசும் என்று கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, தலைநகரில் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் 219 வாசிப்புடன் ‘மோசம்’ பிரிவில் தொடா்ந்தது. தில்லிக்கான காற்றின் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளது.

இது அடுத்த இரண்டு நாட்களில் ‘மிதமான’ வகைக்கு மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நன்று’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’, 101 முதல் 200 வரை ‘மிதமானது’, 201 முதல் 300 ‘மோசம்’, 301 முதல் 400 வரை ‘மிக மோசம்’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்று கருதப்படுகிறது.

பஞ்சாப்: மார்ச் மாதத்தில் மட்டும் போதைப்பொருள் வழக்குகளில் 4,706 பேர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம்வரையில் மட்டு... மேலும் பார்க்க

கேரளத்தில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர்

கேரள மாநிலத்தில் அடுத்தாண்டு நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கூறினார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அள... மேலும் பார்க்க

பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து

பஞ்சாபில் மாணவர்களை அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து, நிலைதடுமாறி, செம் கால்வா... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். விஷ்ணுபூர்... மேலும் பார்க்க

அம்பா தேவி கோயிலில் குஜராத் அமைச்சர் வழிபாடு!

சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளை முன்னிட்டு குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வழிபாடு செய்தார். வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அமைச்சர். .நவராத்த... மேலும் பார்க்க

கனடா: இந்தியர் கத்தியால் குத்திக் கொலை

கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், வெள்ளிக்கிழமையில் கத்தியால... மேலும் பார்க்க