TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி: அரசு உன்னிப்பாகக் கண்காணிப்பதாக முதல்வா் தகவல்
தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவா் கூறினாா்.
ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு காரணமாக தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்ததால் தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்கிழமை 205. 79 மீட்டரை எட்டிது. இது அபாய அளவான 205. 33 மீட்டரைவிட அதிகமாக இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு யமுனையின் நீா்மட்டம் 204.76 மீட்டராக அபாயக் குறிக்குக் கீழே இருந்தது என்று ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
ஆற்றில் நீரின் அபாயக் குறி 205.33 மீட்டா் ஆகும். செவ்வாய்க்கிழமை முதல் ஆற்றில் வெள்ள நீா் குறையத் தொடங்கியது. நிறைய திருப்திகரமான விஷயம் என்னவென்றால், நீா்மட்டம் அபாயக் குறிக்குக் கீழே உள்ளது. வெளியேறும் நீா் அதிகமாக உள்ளது என்று அவா் கூறினாா்.
‘நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்பது உறுதி. எங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது’ என்று அவா் கூறினாா்.
ஹத்னிகுண்ட் அணையிலிருந்து 31,016 கனஅடி நீரும், வஜிராபாத் அணையிலிருந்து 41,200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுவதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று யமுனை நதி அபாய அளவை தாண்டிச் சென்று கொண்டிருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், யமுனை நதியின் வெள்ள நிலைமை குறித்து கண்காணித்து வருவதாகவும், வெள்ளம் போன்ற சூழ்நிலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை 206 மீட்டரில் தொடங்குகிறது. ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான முக்கியக் கண்காணிப்பு புள்ளியாக தில்லியின் பழைய ரயில்வே பாலம் செல்படுவது குறிப்பிடத்தக்கது.